TNPSC Thervupettagam

முக்கியத் தகவல் உள்கட்டமைப்பு

June 23 , 2022 1121 days 470 0
  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகமானது, ICICI வங்கி, HDFC வங்கி மற்றும் ஒருங்கிணைந்தப் பணவழங்கீட்டு இடைமுகத்தினை நிர்வகிக்கும் நிறுவனமான NPCI ஆகியவற்றின் தகவல் தொழில்நுட்ப வளங்களை ‘முக்கியத் தகவல் உள்கட்டமைப்பு’ என்று அறிவித்துள்ளது.
  • இவற்றிற்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் அது தேசியப் பாதுகாப்பில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இது குறிக்கிறது.
  • இந்த வளங்களை அங்கீகாரமின்றி அணுகும் எந்தவொரு நபருக்கும் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
  • 2000 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ், எந்தவொரு தரவு, தரவுத் தளம், தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு அல்லது தகவல் தொடர்பு உள்கட்டமைப்பு ஆகிய டிஜிட்டல் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக அவற்றினை முக்கியத் தகவல் உள்கட்டமைப்பாக அறிவிக்கும் அதிகாரம் மத்திய அரசிற்கு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்