முக்கியத் துறைமுகங்களில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் 60 சதவிகிதப் பங்கு
October 2 , 2021 1441 days 561 0
சூரிய ஆற்றல் மற்றும் காற்றாலை ஆற்றல் மூலம் இந்தியாவின் முக்கியத் துறைமுகங்களில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்கினை 60 % ஆக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
தற்போது வரை துறைமுகங்களில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்கு 10 சதவீதத்திற்கும் குறைவானத் தேவையையே கொண்டுள்ளது.
2030 ஆம் ஆண்டுக்குள் 50% துறைமுக உபகரணங்களை மின்மயமாக்குவதையும் அரசு இலக்காக நிர்ணயித்துள்ளது.
2030 ஆம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வினை 30% வரை குறைப்பதற்கும் துறைமுகங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளன.