தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (DPIIT), பொருளாதார ஆலோசகர் அலுவலகம் (OEA), 2011-12 ஆம் ஆண்டு அடிப்படையிலான தொடரை மாற்றி, 2022-23 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு திருத்தப்பட்ட முக்கிய தொழில்களின் குறியீட்டு (ICI) தொடரை வெளியிட்டது.
இரும்புத் தாது ஒரு புதிய துறையாகச் சேர்க்கப்பட்டதால், முக்கியத் தொழில்களின் எண்ணிக்கை 8-லிருந்து 9 ஆக உயர்ந்துள்ளது.
நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்புப் பொருட்கள், உரங்கள், எஃகு, சிமெண்ட், மின்சாரம் மற்றும் இரும்புத் தாது ஆகியவை அந்த ஒன்பது முக்கியத் தொழில்களாகும்.
2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ICI 5% ஆண்டு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்ற நிலையில் இதில் இரும்புத்தாது (43.9%), மின்சாரம் (9.8%) மற்றும் சிமெண்ட் (9.8%) ஆகியவை முக்கிய வளர்ச்சியை எட்டியுள்ளன.
புதிய தொடரில், இரட்டைக் கணக்கீட்டைத் தவிர்ப்பதற்காக ஒட்டுமொத்த எஃகு உற்பத்தித் தரவு சேர்ப்பு மற்றும் நிலக்கரி இடைநிலைத் தயாரிப்புகள் (Coal Middling) மற்றும் சுத்திகரிக்கப்பட்ட நிலக்கரி (Washed Coal)ஆகியவற்றைத் தவிர்த்தல் உள்ளிட்ட மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.