முக்கிய மந்திரி கிஷான் ஆயே பட்கோத்திரி சூரிய ஒளித் திட்டம்
July 28 , 2018 2477 days 780 0
தேசியத் தலைநகரான டெல்லியில் உள்ள விவசாயிகள் கூடுதல் வருவாயிற்காக தங்கள் நிலத்தின் ஒரு பகுதியினை சூரிய ஒளிப் பலகைகள் அமைப்பதற்கு குத்தகைக்கு விடும் திட்டத்திற்கு டெல்லி அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
முக்கிய மந்திரி கிஷான் ஆயே பட்கோத்திரி சூரிய ஒளித் திட்டத்தின் கீழ்
எந்தவொரு விவசாயியும் தனது நிலத்தின் மூன்றில் ஒரு பகுதிக்கு மிகாமல் சூரிய ஒளிப் பலகை அமைப்பதற்காக ஏக்கருக்கு 1 லட்சத்திற்கு தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைக்கலாம்.
இந்த விவசாயிகள் முதலீடு செய்யாமல் 1000 யூனிட்கள் இலவச சூரிய ஒளி மின்சாரத்தைப் பெறுவார்கள்.