முக்கிய கனிமங்கள் குறித்த ஆய்வுகளை விரைவுபடுத்துவதற்கான திட்டம்
December 24 , 2023 600 days 286 0
சுரங்க அமைச்சகம் ஆனது, முக்கிய மற்றும் நிலத்தின் ஆழ் நிலைகளில் காணப்படும் கனிமங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதை துரிதப் படுத்துவதற்கான புதிய திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
திட்டத்திற்கான அனுமதி வழங்கீடுகளில் ஏற்படும் தாமதங்களை நீக்குதல், திட்டச் செயலாக்கத்தை விரைவுபடுத்துதல் மற்றும் தேசிய கனிம ஆய்வு அறக்கட்டளையின் (NMET) நிதியுதவியுடன் பெரிய நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் ஆகியவற்றை ஆய்வுத் திட்டங்களில் ஈடுபட ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
சுரங்கத் துறை அமைச்சகமானது, அறிவிக்கப்பட்ட தனியார் ஆய்வு நிறுவனங்களுக்கு (NPEAs) ஆய்வுத் திட்டங்களை வழங்குவதற்கு நேரடியாக அனுமதிக்கும்.
இந்த NPEA நிறுவனங்களுக்கு முன்பு கிடைக்காத சலுகையான தாங்கள் ஆய்வு செய்த கனிமத் தொகுதிகளை ஏலம் விடுவதற்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளன.