முக்கிய மந்திரி கன்யா விவாஹ யோஜனா - மத்தியப் பிரதேசம்
October 29 , 2019 2123 days 802 0
மத்தியப் பிரதேச அரசு 'முக்கிய மந்திரி கன்யா விவாஹ/ நிக்கா யோஜ்னா' என்ற ஒரு திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
இந்த அரசுத் திட்டத்தின் படி, மாநிலத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த மணப்பெண்கள் திருமணத்திற்கு முன்பு அவர்களது மணமகனின் வீட்டில் கழிப்பறை இருப்பதை அவர்கள் நிரூபித்தால் அந்த மணப்பெண்கள் ரூ 51,000 நிதியுதவியைப் பெறத் தகுதியுடையவர்களாவர்.
அதற்காக, மணமகன் தனது வீட்டில் உள்ள கழிப்பறையில் நிற்கும்படியான ஒரு சுயப் புகைப்படத்தை எடுப்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
இது மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறைகள் கட்டப்படுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.