மத்தியப் பிரதேச மாநில அமைச்சரவையானது சுயசார்பு கிராமப்புற மேம்பாட்டினை ஊக்குவிப்பதற்காக வேண்டி முக்கிய மந்திரி பிருந்தாவன் கிராம யோஜனா என்ற திட்டத்தினை அங்கீகரித்துள்ளது.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் குறைந்த பட்சம் 2,000 மக்கள்தொகை மற்றும் குறைந்தது 500 கால்நடைகளைக் கொண்ட ஒரு கிராமம் இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும்.
இந்தக் கிராமங்களானது, தன்னிறைவு கொண்ட மற்றும் முழுமையான மேம்பாட்டின் மாதிரிகளாகச் செயல்படும் பிருந்தாவன் கிராமங்களாக மேம்படுத்தப்படும்.
பசு வளர்ப்பு, பால் பண்ணை மேம்பாடு, இயற்கை வேளாண்மை, சூரிய சக்தி, நீர் வளங் காப்பு, மேய்ச்சல் நிலத்தின் மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கிராமப்புறத்தில் தொழில்முனைவு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை இந்தத் திட்டத்தின் கீழ் கவனம் செலுத்தப்படும் துறைகளில் அடங்கும்.