தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியத்தில் (NIIF) கூடுதலாக ₹30,000 கோடி முதலீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் இந்திய அரசின் மொத்த முதலீட்டுத் தொகை ₹60,000 கோடியாக உயர்ந்து உள்ளது.
தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியம் (NIIF) என்பது இந்தியாவின் இறையாண்மை ஆதரவுடனான முதலீட்டுத் தளமாகும் என்ற நிலையில் இதில் அரசு 49% பங்குகளைக் கொண்டுள்ளது.
இந்த முதலீடு, ₹30,000 கோடி இலக்கு நிதியைக் கொண்ட NIIF உள்கட்டமைப்பு நிதியம் II-க்கு ஆதரவளிக்கும்.
இந்த நிதியம் போக்குவரத்து, எரிசக்தி, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, நகர்ப்புற உள் கட்டமைப்பு மற்றும் மின்னணு-இயக்கத் திறன் ஆகிய துறைகளில் முதலீடு செய்யும்.