TNPSC Thervupettagam

முக்தோஷ்ரி அரிசி வகை

February 13 , 2020 2439 days 1129 0
  1. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆர்சனிக் எதிர்ப்பு சக்தியைக் கொண்ட ஒரு அரிசி வகையை உருவாக்கி வணிகமய மாக்கியுள்ளனர்.
  2. இந்தப் புதிய அரிசி வகையானது முக்தோஷ்ரி என்று அழைக்கப்படுகின்றது. இது IET 21845 என்றும் அழைக்கப் படுகின்றது.
  3. இது மேற்கு வங்கத்தின் வேளாண்மைத் துறையின் கீழ் செயல்படும் சின்சுராவில் உள்ள அரிசி ஆராய்ச்சி நிலையம் மற்றும் லக்னோவின் தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றால் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
  4. இது போரோ (குளிர்கால) பருவத்தில் ஒரு ஹெக்டேருக்கு 5.5 மெட்ரிக் டன் மற்றும் காரீப் பருவத்தில் ஒரு ஹெக்டேருக்கு 4.5 முதல் 5 மெட்ரிக் டன் வரையிலான மகசூலைத் தரும் திறன் கொண்டது.
  5. இந்த அரிசி வகையானது நீளமானதாகவும் மெல்லியதாகவும் நறுமணம் கொண்டதாகவும் இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்