முக அங்கீகாரத்தைப் பயன்படுத்தும் ஆசியாவின் முதலாவது விமான நிலையம்
September 11 , 2018 2602 days 865 0
விமான நிலையத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு செல்வதற்காகவும் பயணிகள் விமானத்தில் பயணிப்பதற்கு அனுமதி பெறும் செயல்முறைகளுக்காகவும் முக அங்கீகாரத்தை பயன்படுத்தும் ஆசியாவின் முதலாவது விமான நிலையம் பெங்களுருவில் உள்ள கெம்பகௌடா சர்வதேச விமான நிலையமாகும்.
ஆசியாவில் முக அங்கீகார அடிப்படையில் செயல்படுத்தும் முதல் சோதனை முயற்சி இதுவாகும். மேலும் இது ஆசியாவில் மிகப் பெரியது ஆகும்.
மேலும் அரசாங்கத்தால் வலியுறுத்தப்படும் டிஜிட்டல் இந்தியா பிரச்சாரத்தின் முக்கிய நடவடிக்கைகளில் இது ஒன்றாகும்.
இந்த அமைப்பின் முதல் செயல்படுத்துதல் 2019-ல் முடிவடையவிருக்கிறது. ஜெட் ஏர்வேஸ், ஏர் ஆசியா மற்றும் ஸ்பைஸ் ஜெட் ஆகிய விமானங்களின் பயணிகள் இதைப் பயன்படுத்தும் முதல் பயணிகள் ஆவர்.