தேசிய குற்ற ஆவணக் காப்பகமானது ஒரு தானியங்கி முக அங்கீகார அமைப்பிற்கான முன்மொழிவு கோரிக்கையை வெளியிட்டுள்ளது.
இது குற்றவாளிகள், காணாமல் போனவர்கள், அடையாளம் தெரியாத இறந்த உடல்கள் மற்றும் குற்றத் தடுப்பு ஆகியவற்றில் அடையாளம் காண்பதற்காக நாடு முழுவதும் உள்ள காவல் துறை அதிகாரிகளால் பயன்படுத்தப்படும்.
இந்த அமைப்பானது மக்களின் முகப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளுடனான பெரிய தரவுத் தளத்தைப் பராமரிப்பதன் மூலம் செயல்படுகிறது.
இது மிக துல்லியமாக முகப் பொருத்தங்களை கண்டுபிடிப்பதற்கும் குறிப்பாக கூட்டங்களிடையே அடையாளம் காண்பதற்குமான எளிய தீர்வாகும்.
மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகமானது ஐதராபாத் விமான நிலைய நுழைவிற்கு இந்த அமைப்பின் முன்னோட்டத்தை ஜூலை 01 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது.
இந்தத் தொழில் நுட்பமானது தனியுரிமை சிக்கல்கள் மற்றும் தரவு மீறல்கள் குறித்த அச்சத்தையும் எழுப்புகின்றது.