முட்டையிட்டு குட்டி ஈன்று பாலூட்டும் இருவாழ்வி இனங்கள்
March 15 , 2024 486 days 463 0
புழு போன்ற ஓர் இருவாழ்வி இனத்தின் ஒரு வகையானது கொழுப்பு நிறைந்த பால் போன்ற திரவத்தை அதன் குட்டிகளுக்கு ஊட்டுவது ஓர் ஒளிப்படக் கருவியில் படம் பிடிக்கப் பட்டுள்ளது.
இந்த நீளமான, உருளை வடிவ உயிரினங்கள் ஆனது தனது குட்டிகளுக்கு இவ்வாறு உணவளிக்கின்ற, இதுவரை அறியப்பட்ட முதல் முட்டையிடும் இருவாழ்வி இனமாகும்.
சிசிலியன் எனப்படும் இந்த உயிரினம், நிலத்தடியில் வாழ்கிறது.
சிசிலியன்கள் என்பவை தவளைகள் மற்றும் சாலமண்டர்களின் (ஒரு வகைப் பல்லி) மரபு வழியைச் சேர்ந்தவையாகும்.
நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அவற்றின் முந்தைய இனங்கள் நிலத்தடியில் ஆழமானப் பகுதிகளில் புதையுண்டன.