அமெரிக்காவில் நடைபெற்ற முதல் இந்தியா - கேரிகாம் தலைவர்களின் உச்சி மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி கரீபியன் சமூகம் மற்றும் பொதுச் சந்தைக் குழுவின் (Caribbean Community and Common Market - CARICOM) தலைவர்களைச் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பானது காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதிலும் அந்தக் குழுவுடன் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்தியது.
அண்மையில் டோரெய்ன் சூறாவளியின் போது பஹாமாஸுக்கு இந்தியா 1 மில்லியன் டாலரை உடனடி உதவியாக வழங்கியது.
இதுபற்றி
CARICOM குழுவில் 15 உறுப்பினர் நாடுகள் மற்றும் ஐந்து இணை உறுப்பு நாடுகள் உள்ளன.
இது 1973 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
பிராந்தியத்திற்கான கொள்கைகளை வடிவமைப்பதற்கும் பொருளாதார வளர்ச்சி மற்றும் வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்கும் கூட்டாக இணைந்து செயல்படும் ஒரு பொருளாதார மற்றும் அரசியல் சமூகமாக இது நிறுவப்பட்டது.
CARICOM உறுப்பு நாடுகள்
ஆன்டிகுவா & பார்புடா, பஹாமாஸ், பார்படாஸ், பெலிஸ், டொமினிகா, கிரெனடா, கயானா, ஹைட்டி, ஜமைக்கா, செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயிண்ட் லூசியா, செயிண்ட் வின்சென்ட் & கிரெனடைன்ஸ், சுரினாம், டிரினிடாட் மற்றும் டொபாகோ.