ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் முதலாவது இந்திய மனித மூளை வரைபடத்தை உருவாக்கி இருக்கின்றனர்.
மேற்கத்திய மற்றும் மற்ற கிழக்கத்திய மக்கள் தொகையோடு ஒப்பிடப் படும் போது சராசரியாக இந்திய மனித மூளையானது உயரம், அகலம் மற்றும் கொள்ளளவு ஆகியவற்றில் சிறியதாக இருக்கின்றது என்று இந்த ஆராய்ச்சி ஒரு தகவலை வெளியிட்டு இருக்கின்றது.
இந்த வரைபடம் அல்சைமர் மற்றும் இதர மூளை சம்பந்தப்பட்ட வியாதிகளைப் பற்றிய முன்கூட்டிய ஆய்வுறுத்தலில் உதவிடும்.
மேலும் இது இந்தியர்களுக்கான சிறந்த காந்த அதிர்வு அலை வரைவு (MRI- Magnetic resonance imaging) பகுப்பாய்விலும் உதவிடும்.
இதற்கு முன்பு, இந்தியர்களின் MRI புகைப்படங்கள் காகசீயர்கள் (ஐரோப்பியர்கள்), சீனர்கள் அல்லது கொரியர்களின் மூளையின் புகைப்படங்களோடு ஒப்பிடப் பட்டன.