முதலாவது சோதனை அடிப்படையிலான கொள்கலன் (சரக்கு) கப்பல்
July 20 , 2020 1748 days 664 0
இது வங்க தேசத்தின் சட்டோகிராம் துறைமுகத்தின் வழியாக கொல்கத்தாவிலிருந்து திரிபுராவில் உள்ள அகர்தலாவிற்கு கொடியசைத்துத் துவக்கி வைக்கப்பட்டது.
இந்தத் திட்டம் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியை இணைப்பதற்காக இந்தியாவிற்கான ஒரு மாற்று மற்றும் குறுகிய தொலைவுள்ள வழியை அளிக்க இருக்கின்றது.
இது வங்க தேசத்தின் வழியாக இந்தியாவின் சரக்குப் போக்குவரத்திற்காக வேண்டி சட்டோகிராம் மற்றும் மோங்கலா துறைமுகங்களின் பயன்பாடு மீதான ஒப்பந்தத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிலத்தால் சூழப்பட்ட இந்திய மாநிலங்களான அசாம், மேகாலயா மற்றும் திரிபுரா ஆகியவை இந்திய வழிகளின் மூலம் சட்டோகிராம் மற்றும் மோங்கலா துறைமுகங்களிலிருந்து திறந்தவெளியிலான 8 கடல்வழித் தடங்களின் அணுகுதலைப் பெற்றுள்ளன.