TNPSC Thervupettagam

முதலாவது தனியார் ரயில்: தேஜாஸ் தில்லி – லக்னோ

September 17 , 2019 2120 days 732 0
  • இந்தியாவின் முதலாவது தனியார் ரயிலான தில்லி - லக்னோ தேஜாஸ் விரைவு ரயிலானது 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி முதல் இயங்க விருக்கின்றது.
  • இது இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகத்தினால் (Indian Railway Catering and Tourism Corporation  - IRCTC) முழுவதுமாக இயக்கப்படும் இந்திய ரயில்வேயின் முதலாவது ரயிலாகும்.
  • முதன்முறையாக, ரயில் பெட்டிகளின் நுழைவு வாயில்களிலேயே கட்டணம் செலுத்தி எடைகளை எடுத்துச் செல்லுதல் மற்றும் விநியோகச் சேவை ஆகியவை இதில் அறிமுகப்படுத்தப் படுகின்றது.
  • இந்த ரயிலுக்கு முன்பதிவு மையங்களில் தட்கல் பயணச் சீட்டுகள் மற்றும் சாதாரண பயணச் சீட்டுகள் வழங்கப்படுவதில்லை.
  • இந்த ரயில்களில் சலுகைகள் மற்றும் பணியாளர்கள் பணியில் இருக்கும் போது பயணித்தல் ஆகியவை அனுமதிக்கப்படாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்