TNPSC Thervupettagam

முதலாவது தேசிய பெருநிறுவன சமூகப் பொறுப்புடைமை விருதுகள்

October 31 , 2019 2076 days 674 0
  • பெருநிறுவன சமூகப் பொறுப்புடைமை துறையில் நிறுவனங்களின் சிறந்த பங்களிப்பிற்காக இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முதலாவது தேசிய பெருநிறுவன சமூகப் பொறுப்புடைமை விருதுகளை (Corporate Social Responsibility - CSR) வழங்கினார்.
  • காந்திஜியின் 150வது பிறந்தநாளில் தேசிய பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு விருதுகளை ஆரம்பித்ததற்காக மத்திய பெருநிறுவனத் துறை அமைச்சகம் வெகுவாக பாராட்டப் பட்டது.
  • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 ஆம் தேதி அன்று இந்த விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன.
CSR
  • நிறுவனங்கள் சட்டம், 2013 இன் கீழ் CSR விதிகள் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தன.
  • நிறுவனங்கள் சட்டம், 2013 இன் கீழ், சில வகையான இலாபம் ஈட்டும் நிறுவனங்கள் தங்களது மூன்று ஆண்டு வருடாந்திர சராசரி நிகர லாபத்தில் குறைந்தது இரண்டு சதவீதத்தை ஒரு நிதியாண்டில் பெருநிறுவன சமூகப் பொறுப்புடைமை நடவடிக்கைகளுக்குச்  செலவிட வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்