முதலாவது தேசிய பெருநிறுவன சமூகப் பொறுப்புடைமை விருதுகள்
October 31 , 2019 2107 days 687 0
பெருநிறுவன சமூகப் பொறுப்புடைமை துறையில் நிறுவனங்களின் சிறந்த பங்களிப்பிற்காக இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முதலாவது தேசிய பெருநிறுவன சமூகப் பொறுப்புடைமை விருதுகளை (Corporate Social Responsibility - CSR) வழங்கினார்.
காந்திஜியின் 150வது பிறந்தநாளில் தேசிய பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு விருதுகளை ஆரம்பித்ததற்காக மத்திய பெருநிறுவனத் துறை அமைச்சகம் வெகுவாக பாராட்டப் பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 ஆம் தேதி அன்று இந்த விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன.
CSR
நிறுவனங்கள் சட்டம், 2013 இன் கீழ் CSR விதிகள் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தன.
நிறுவனங்கள் சட்டம், 2013 இன் கீழ், சில வகையான இலாபம் ஈட்டும் நிறுவனங்கள் தங்களது மூன்று ஆண்டு வருடாந்திர சராசரி நிகர லாபத்தில் குறைந்தது இரண்டு சதவீதத்தை ஒரு நிதியாண்டில் பெருநிறுவன சமூகப் பொறுப்புடைமை நடவடிக்கைகளுக்குச் செலவிட வேண்டும்.