முதலாவது தேசிய மகளிர் சட்டமன்ற உறுப்பினர்கள் மாநாடு
May 31 , 2022 1174 days 635 0
குடியரசுத் தலைவர் அவர்கள் இரண்டு நாட்கள் அளவிலான முதலாவது தேசிய மகளிர் சட்டமன்ற உறுப்பினர்கள் மாநாட்டினைத் திருவனந்தபுரத்தில் தொடங்கி வைக்க உள்ளார்.
நாடு முழுவதிலும் இருந்து அதிக எண்ணிக்கையிலான பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கேற்பார்கள் என எதிர் பார்க்கப் படுகிறது.
இந்தியாவின் 75வது சுதந்திரத் தினத்தைக் கொண்டாடும் சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா நிகழ்வின் (ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்) கீழ் திட்டமிடப்பட்ட நாடு தழுவிய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இத்தகைய முதல் நிகழ்வானது கேரள மாநிலச் சட்டமன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.