இந்தியக் கடற்படையானது கொச்சியில் உள்ள டிரோனியர் விமானத்தில் முதலாவது பெண் விமானிக் குழுவைப் பணியில் சேர்த்துள்ளது.
இது இந்தியக் கடற்படையின் தெற்குக் கடற்படைக் கட்டுப்பாட்டகத்தினால் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
தளபதி திவ்யா சர்மா, தளபதி சிவரங்கி மற்றும் தளபதி சுபாங்கி சுவரூப் ஆகியோர் இந்த 3 பெண் விமானிகள் ஆவர்.
2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், இந்திய வரலாற்றில் முதன்முறையாக, பெண் விமானிகள் இந்தியக் கடற்படையின் வானூர்திப் பிரிவில் பார்வையாளர்களாக பணி புரியத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களுக்கு கொச்சியில் உள்ள ஐஎன்எஸ் கருடா என்ற கப்பலில் “பார்வையாளர்களாக” பயிற்சி நிறைவு செய்த பின்பு “கிளை அலுவலர்”(Wings) என்ற பட்டம் வழங்கப் பட்டுள்ளது.