முதலாவது தொடர் சங்கிலி அடிப்படையிலான டிஜிட்டல் நாணயம்
March 21 , 2019 2335 days 802 0
கிழக்கு கரீபியன் மத்திய வங்கி (Eastern Caribbean Central Bank) மற்றும் பார்படாசை மையமாகக் கொண்டு செயல்படும் நிதியியல் தொழில்நுட்ப நிறுவனமான பிட் நிறுவனம் ஆகியவை இணைந்து மத்திய வங்கியின் டிஜிட்டல் நாணயத்தை தொடர் சங்கிலி அடிப்படையில் வெளியிடுவதற்கு ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இது கிழக்கு கரீபியன் நாணய ஒன்றியத்திற்குள் செயல்படுத்தப்படும் (ECCU - Eastern Caribbean Currency Union) ஒரு பரிசோதனைத் திட்டமாகும்.
உலகில் இது போன்ற ஒரு திட்டம் செயல்படுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்த நாணயம் பாதுகாப்பாக தயாரிக்கப்படவிருக்கிறது. மேலும் இது கிழக்கு கரீபியன் டாலரின் (EC dollar - DXCD) டிஜிட்டல் பதிப்பில் வழங்கப்படவிருக்கிறது.
மேலும் DXCD ஆனது தொடர் சங்கிலி அடிப்படையில் மத்திய வங்கியால் வழங்கப்படவிருக்கும் உலகின் முதலாவது டிஜிட்டல் முறையிலான சட்டப்படியான நாணயமாகும்.