முதலாவது மெய்நிகர் காவல் நிலையம் – ஆந்திரப் பிரதேசம்
December 17 , 2019 2232 days 1096 0
ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டி விசாகப் பட்டினத்தில் உள்ள ஆந்திரப் பல்கலைக் கழகத்தில் முதலாவது மெய்நிகர் காவல் நிலையத்தைத் திறந்து வைத்தார்.
மெய்நிகர் காவல் நிலையம் என்ற கருத்தானது ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான பிரசாத் ரெட்டியால் முன்மொழியப் பட்டது. இந்த மெய்நிகர் காவல் நிலையமானது மாணவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
இந்தக் காவல் நிலையமானது புகார் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய வழிமுறை ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.