முதலாவது வேளாண் பொருள் ஏற்றுமதி வசதி வழங்கும் மையம்
May 20 , 2021 1714 days 853 0
மகாராஷ்டிரா வர்த்தகத் தொழில்துறை மற்றும் வேளாண் மன்றம் மற்றும் தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (NABARD - National Bank for Agriculture and Rural Development) ஆகியவை இணைந்து முதலாவது வேளாண் பொருள் ஏற்றுமதி வசதி வழங்கும் மையத்தினைத் தொடங்கியுள்ளன.
மகாராஷ்டிர மாநிலத்தின் வேளாண் மற்றும் உணவுப் பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதில் இந்த மையமானது உறுதுணையாக செயல்படும்.
மகாராஷ்டிரா மாநிலமானது,
அதிகளவில் வெங்காயம் உற்பத்தி செய்யும் மாநிலங்களுள் ஒன்றாக உள்ளது.
முன்னணி பருப்பு உற்பத்தி மாநிலமாக திகழ்கிறது.
மோட்டா தானிய (coarse cereals) உற்பத்தியில் இரண்டாமிடத்திலும்
சோயா பருப்பு, கரும்பு மற்றும் பருத்தி ஆகியவற்றின் உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும்
சூரியகாந்தி உற்பத்தியில் மூன்றாமிடத்திலும் உள்ளது.