நிதி ஆயோக் “முதலீட்டாளர்களுக்கு உகந்த மாநிலங்கள் குறியீடு” குறித்த அறிக்கையை வெளியிட்டது.
முதலீட்டாளர்களுக்கு உகந்த மாநிலங்கள் குறியீடு (IFI) குறித்த முதல் அறிக்கை இதுவாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதிலும், எளிதாக்குவதிலும், நிலை நிறுத்துவதிலும் இந்திய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் (UTs) தயார் நிலையை அளவுகோலாகக் கொண்டு மதிப்பிடுவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
இது எட்டு தூண்களின் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் முதலீட்டுத் தயார்நிலையை மதிப்பிடும் ஒரு உள்நாட்டு கட்டமைப்பாகும்.
முதலீட்டை ஈர்ப்பதற்கான சிறந்த இடமாக குஜராத் இந்தக் குறியீட்டில் முதலிடம் வகிக்கிறது.
அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கோவா மற்றும் ஒடிசா ஆகியவை உள்ளன.
மலைப்பாங்கான மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் - உத்தரகாண்ட் முதலிடத்தைப் பிடித்தது, அதனைத் தொடர்ந்து அசாம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் உள்ளன.
ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் நகர மாநிலங்கள் - டெல்லி மற்றும் சண்டிகர்.
எட்டு முக்கிய தூண்கள்:
உள்கட்டமைப்பு: பௌதீக தளவாடங்கள், மின்சார நம்பகத்தன்மை மற்றும் டிஜிட்டல் இணைப்பு.
வணிகச் சூழல்: ஒற்றைச் சாளர அனுமதிகளின் செயல்திறன் மற்றும் செயல்பாட்டுத் தொடர்ச்சி.
வளங்கள்: தொழில்துறை நிலம், திறமையான தொழிலாளர் தொகுப்புகள் மற்றும் மூலப்பொருட்களின் கிடைக்கும்தன்மை.
அரசாங்கக் கொள்கை: காலப்போக்கில் கொள்கையின் முன்கணிப்புத்தன்மை மற்றும் நிலைத்தன்மை.
ஒழுங்குமுறை எளிமை: அதிகாரத்துவ உராய்வுகள் மற்றும் இணக்கச் சுமைகளைக் குறைத்தல்.
நிறுவனச் சூழல்: அரசு நிறுவனங்களின் திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் பதிலளிக்கும் தன்மை.
நிதி ஆரோக்கியம்: நிதிசார் விவேகம் மற்றும் மாநில அளவிலான பேரியல் பொருளாதாரக் குறிகாட்டிகள்.
சுற்றுச்சூழல் மீள்திறன்: நிலைத்தன்மை மற்றும் சூழலியல் இணக்க அளவுருக்கள்.