TNPSC Thervupettagam

முதலீட்டாளர்களுக்கு உகந்த மாநிலங்கள் குறியீடு

July 27 , 2026 15 hrs 0 min 11 0
  • நிதி ஆயோக் “முதலீட்டாளர்களுக்கு உகந்த மாநிலங்கள் குறியீடு” குறித்த அறிக்கையை வெளியிட்டது.
  • முதலீட்டாளர்களுக்கு உகந்த மாநிலங்கள் குறியீடு (IFI) குறித்த முதல் அறிக்கை இதுவாகும்.
  • உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதிலும், எளிதாக்குவதிலும், நிலை நிறுத்துவதிலும் இந்திய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் (UTs) தயார் நிலையை அளவுகோலாகக் கொண்டு மதிப்பிடுவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இது எட்டு தூண்களின் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் முதலீட்டுத் தயார்நிலையை மதிப்பிடும் ஒரு உள்நாட்டு கட்டமைப்பாகும்.
  • முதலீட்டை ஈர்ப்பதற்கான சிறந்த இடமாக குஜராத் இந்தக் குறியீட்டில் முதலிடம் வகிக்கிறது.
  • அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கோவா மற்றும் ஒடிசா ஆகியவை உள்ளன.
  • மலைப்பாங்கான மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் - உத்தரகாண்ட் முதலிடத்தைப் பிடித்தது, அதனைத் தொடர்ந்து அசாம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் உள்ளன.
  • ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் நகர மாநிலங்கள் - டெல்லி மற்றும் சண்டிகர்.

எட்டு முக்கிய தூண்கள்:

  • உள்கட்டமைப்பு: பௌதீக தளவாடங்கள், மின்சார நம்பகத்தன்மை மற்றும் டிஜிட்டல் இணைப்பு.
  • வணிகச் சூழல்: ஒற்றைச் சாளர அனுமதிகளின் செயல்திறன் மற்றும் செயல்பாட்டுத் தொடர்ச்சி.
  • வளங்கள்: தொழில்துறை நிலம், திறமையான தொழிலாளர் தொகுப்புகள் மற்றும் மூலப்பொருட்களின் கிடைக்கும்தன்மை.
  • அரசாங்கக் கொள்கை: காலப்போக்கில் கொள்கையின் முன்கணிப்புத்தன்மை மற்றும் நிலைத்தன்மை.
  • ஒழுங்குமுறை எளிமை: அதிகாரத்துவ உராய்வுகள் மற்றும் இணக்கச் சுமைகளைக் குறைத்தல்.
  • நிறுவனச் சூழல்: அரசு நிறுவனங்களின் திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் பதிலளிக்கும் தன்மை.
  • நிதி ஆரோக்கியம்: நிதிசார் விவேகம் மற்றும் மாநில அளவிலான பேரியல் பொருளாதாரக் குறிகாட்டிகள்.
  • சுற்றுச்சூழல் மீள்திறன்: நிலைத்தன்மை மற்றும் சூழலியல் இணக்க அளவுருக்கள்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்