தேவேந்திர ஃபட்னாவிஸ் (மகாராஷ்டிரா) மற்றும் சுக்விந்தர் சிங் (இமாச்சலப் பிரதேசம்) ஆகியோர் மீது தலா நான்கு வழக்குகளும், பினராயி விஜயன் (கேரளா) மீது இரண்டு வழக்குகளும், பகவந்த் மான் (பஞ்சாப்) ஒரு வழக்கும் உள்ளன.
பத்து முதலமைச்சர்கள் (33%) மீது கொலை முயற்சி, கடத்தல், லஞ்சம் வாங்குதல் மற்றும் மிரட்டல் போன்ற கடுமையான குற்ற வழக்குகள் இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
கடுமையான குற்றச்சாட்டுகளின் பேரில் 30 நாட்கள் கைது செய்யப்பட்ட பிரதமர்கள், முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்வதற்கான மசோதாக்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியதை அடுத்து இந்த அறிக்கை வெளியிடப் பட்டது.
ஜனநாயகச் சீர்திருத்த சங்கம் (ADR) இதனை ஒரு பகுப்பாய்வு அறிக்கையில் கூறியது