முதல் அனைத்து மகளிர் தபால்நிலைய கடவுச்சீட்டு சேவை மையம்
May 19 , 2018 2674 days 923 0
மகளிர் குழுவால் நடத்தப்படும் தபால்நிலைய கடவுச்சீட்டு சேவை மையம் பஞ்சாப் மாநிலத்தின் பாக்வாராவில் தன்னுடைய செயல்பாட்டைத் தொடங்கியுள்ளது.
இந்த மையமானது நாட்டின் 192-வது தபால்நிலைய கடவுச்சீட்டு சேவை மையம் ஆகும். மேலும் இது பெண்கள் குழுவால் நிர்வகிக்கப்படும் முதல் மையம் ஆகும்.
இது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் தபால்துறை (Department of Post) ஆகியவற்றின் முயற்சியாகும். தபால் நிலையங்கள், தலைமைத் தபால் நிலையங்கள் ஆகியவை கடவுச்சீட்டு (Passport) தொடர்பான சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்காக பயன்படுத்தப்படுகின்றன.
முதல் மையம், கர்நாடகா மாநிலத்தின் மைசூரு தலைமைத் தபால் நிலையத்தில் ஜனவரி 2017ல் தொடங்கப்பட்டது.