சஹோதயா பள்ளி வளாகங்களின் முதல் சர்வதேச மற்றும் 31வது வருடாந்திர மாநாடு துபாயில் நடைபெற்றது.
இந்த மாநாடு, 2020 ஆம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கையினால் (NEP) வழி நடத்தப் படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) முதல் வெளிநாட்டு சஹோதயா நிகழ்வைக் குறிக்கிறது.
இந்த நிகழ்வின் கருத்துரு, "Rooted in Wisdom, Rising with Vision: Reimagining Education through NEP 2020" என்பதாகும்.
உலகளாவியக் கூட்டாண்மைகளை வளர்த்தல், NEP 2020 கொள்கையை செயல் படுத்துதல், கற்பிப்பதில் புதுமைகளைப் பயன்படுத்துதல் மற்றும் திறனாய்வுச் சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் உலகளாவியக் குடியுரிமையுடன் முழுமையான கல்வியை ஊக்குவித்தல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாகும்.