November 28 , 2025
14 days
76
- சுண்ணாம்புக்கல் கனிமத் தொகுதிகளின் முதல் ஏலம் ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடைபெற உள்ளது.
- அனந்த்நாக், ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் சுமார் 314 ஹெக்டேர் பரப்பளவில் ஏழு சுண்ணாம்புக் கல் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
- இந்த ஏலம் 2015 ஆம் ஆண்டு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழான சுரங்கச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகும்.
- இந்தத் தொகுதிகள் UNFC (ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு வகைப்பாடு) G3 மற்றும் G4 ஆய்வு நிலைகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
- இந்தத் தொகுதிகளிலிருந்து பெறப்படும் உயர்தரமான சுண்ணாம்புக் கல் சிமெண்ட் உற்பத்தி, கட்டுமானம் மற்றும் பிற தொழில்துறைகளை ஆதரிக்கும்.
- இந்த ஒன்றியப் பிரதேசத்தில் வெளிப்படைத் தன்மை, நிலையான சுரங்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதே இந்த ஏலத்தின் நோக்கமாகும்.

Post Views:
76