TNPSC Thervupettagam

முதல் சுற்றுச்சூழல் அமைப்பு செந்நிறப் பட்டியல் மதிப்பீடு – கேரளா

October 18 , 2026 4 days 73 0
  • கேரள மாநில பல்லுயிர் வாரியம் (KSBB) இந்தியாவின் முதல் மாநில அளவிலான சுற்றுச்சூழல் அமைப்புகளின் செந்நிறப் பட்டியல் மதிப்பீட்டுத் (RLE) திட்டத்தை தொடங்கியுள்ளது.
  • அனைத்து 14 மாவட்டங்களிலும் சுற்றுச்சூழல் அமைப்பு சரிவு அபாயங்களை மதிப்பிடுவதற்காக, கேரள வன ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் MES அஸ்மாபி கல்லூரி ஆகியவை கூட்டாக இந்த ஓராண்டு திட்டத்தை நடத்துகின்றன.
  • தெற்கு மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வெப்பமண்டல நதிக்கரை பசுமை மாறாக் காடுகள் கடந்த நூற்றாண்டில் அவற்றின் பரப்பளவில் 83% ஐ இழந்துள்ளன என்பதோடு மேலும் இவை இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) அளவு கோல்களின் கீழ் மிக அருகிய (Critically Endangered) நிலையில் உள்ளதாக வகைப் படுத்தப் பட்டுள்ளன.
  • இந்த மதிப்பீடு ஐந்து தரப்படுத்தப்பட்ட IUCN அளவுகோல்களைப் பயன்படுத்தி காடுகள், ஆறுகள், மிரிஸ்டிகா சதுப்பு நிலங்கள், சோலை-புல்வெளி சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் கடலோர சதுப்பு நிலங்களை உள்ளடக்கியது.
  • இத்திட்டம் அச்சுறுத்தல்களை அடையாளம் காணும், சுற்றுச்சூழல் அமைப்பு மறு சீரமைப்பு மற்றும் காலநிலை தழுவலுக்கு வழிகாட்டும் மற்றும் நிலையான வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்