TNPSC Thervupettagam

முதல் தேசியப் பவளப்பாறை ஆராய்ச்சி மையம்

December 2 , 2025 23 days 112 0
  • தெற்கு அந்தமானின் சிடியாதபு என்ற இடத்தில் இந்தியாவானது தேசியப் பவளப் பாறை ஆராய்ச்சி நிறுவனத்தை (NCRRI) நிறுவ உள்ளது.
  • சுற்றுச்சூழல், வன மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சகத்தின் கீழ் இதற்கான திட்டச் செலவினம் 120 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • NCRRI பவளப்பாறை ஆராய்ச்சி, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புக்கான தேசிய மையமாகச் செயல்படும்.
  • இந்த மையம் கடல் சார் பல்லுயிர் மதிப்பீடுகள், பவளப்பாறை மீளுருவாக்கம் மற்றும் பருவநிலைத் தாக்க ஆய்வுகளில் கவனம் செலுத்தும்.
  • பவளப்பாறைகள் புயல் தாக்கத்தைக் குறைத்து, இயற்கை கடலோரத் தடுப்புகளாகச் செயல்படுகின்றன என்ற நிலையில் மேலும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் இந்தியாவின் நான்கு பல்லுயிர்ப் பெருக்க மையங்களில் ஒன்றாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்