முதல் தேசிய வேட்டைநாய் (கேனைன் - Canine) கருத்தரங்கம் - மானேசர் (குருகிராம்), ஹரியானா
September 8 , 2017 2979 days 1139 0
இந்தியாவின் முதல் தேசிய வேட்டைநாய் கருத்தரங்கம் ஹரியானாவில் குருகிராம் எனப்படும் மானேசரில் நடத்தப்பட்டது. கருப்பு பூனைகள் என்றறியப்படும் தேசிய பாதுகாப்பு படை (NSG) இதனை நடத்துகின்றது.
இக்கருத்தரங்கானது நாய்களுக்கானப் பயிற்சிகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்புப் பயிற்சிகளில் வேட்டை நாய்களைப் பயன்படுத்தும் யுக்திகள் பற்றி விவாதிப்பதற்காகவும் அதற்கான நுட்பங்கள் பற்றி ஆராயவும் நடத்தப்படுகின்றது.
இதற்கான கருத்துருவானது - “தீவிரவாத எதிர்ப்புச்சண்டையில் வேட்டைநாய் ஒரு தந்திரமான கருவி” என்பதாகும்.