லடாக் துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா லடாக்கில் பனிச்சிறுத்தை தடங்களை மையமாகக் கொண்ட இந்தியாவின் முதல் உயரமான பகுதியின் இரவுநேர வனவிலங்கு உலாவினை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
ஒன்றியப் பிரதேசத்தின் வனத்துறையுடன் இணைந்து பனிச்சிறுத்தை மற்றும் உயரமான இயற்கைப் பாதுகாப்புச் (SHAN) சங்கம் இந்த இரவுநேர வனவிலங்கு உலாவினை இயக்குகிறது.
இரவுநேர வனவிலங்கு உலா வழிகள் ஹெமிஸ் தேசியப் பூங்கா, சாங்தாங் மற்றும் காரகோரம் வனவிலங்கு சரணாலயம் ஆகியவற்றுடன் லடாக்கின் பிற பகுதிகளையும் உள்ளடக்கியது.
அறிக்கையின்படி, லடாக் 477 பனிச்சிறுத்தைகளின் தாயகமாக உள்ளது.
பனிச்சிறுத்தை (பான்தெரா உன்சியா) IUCN செந்நிறப் பட்டியலில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனம் (Vulnerable - VU) என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் சமூகங்களுக்கு பொருளாதார நன்மைகளை வழங்கும் அதே வேளையில் வனவிலங்குப் பாதுகாப்பை ஆதரிப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.