TNPSC Thervupettagam

முதல் பிங்க் காவல் சாவடி - பொன்னேரி

June 15 , 2026 15 hrs 0 min 195 0
  • ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ், தமிழ்நாட்டின் முதல் இளஞ்சிவப்புநிற (பிங்க்) காவல் சாவடி பொன்னேரியில் திறக்கப்பட்டது.
  • இது 15 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய பகுதியைச் சேர்ந்ததாக இருக்கும்.
  • சிறுமிகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பாக உணர்வதற்கும், அப்பகுதியில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் இளஞ்சிவப்புநிற காவல் சாவடி தொடங்கப் பட்டது.
  • இந்தச் சாவடியில் அறநெறி மற்றும் TNPSC உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்பு புத்தகங்கள் அடங்கிய நூலகமும் உள்ளது.
  • ஒரு பாரம்பரிய காவல் நிலையத்திற்கு செல்வது தொடர்பான பயம் இல்லாமல், மாணவிகள் காவல்துறையை அணுகக்கூடிய வகையில் பெண்களுக்கு ஏற்ற இடத்தை வழங்குவதை இந்த முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்