TNPSC Thervupettagam

முதல் பிரிக்ஸ் சுற்றுலா கூட்டம்

May 30 , 2026 13 hrs 0 min 19 0
  • 2026 ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் கீழ், இந்தியா தனது முதல் பிரிக்ஸ் சுற்றுலா பணிக்குழு (TWG) கூட்டத்திற்கு காணொளி வாயிலாக தலைமை தாங்கியது.
  • இக்கூட்டம் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா ஒத்துழைப்பில் கவனம் செலுத்தியது.
  • இந்தியாவின் சுற்றுலா நிகழ்ச்சி நிரலின் கருத்துரு “Building for Resilience, Innovation, Cooperation and Sustainability” என்பதாகும்.
  • சுற்றுலாத்துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு, நிலையான சுற்றுலா, சுற்றுலா திறன் மேம்பாடு மற்றும் தடையற்ற பயண ஒத்துழைப்பு ஆகிய நான்கு முக்கிய முன்னுரிமைகளை இந்தியா முன்னிலைப்படுத்தியது.
  • தனிப்பயனாக்கப்பட்ட பயணச் சேவைகள், சுற்றுலா முன்னறிவிப்புகள் மற்றும் சிறந்த இட மேலாண்மை ஆகியவற்றிற்கு AI-ஐப் பயன்படுத்துவதை இந்தியா வலியுறுத்தியது.
  • இரண்டாவது பிரிக்ஸ் சுற்றுலா பணிக்குழு கூட்டம் மற்றும் பிரிக்ஸ் சுற்றுலா அமைச்சர்கள் கூட்டம் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெறும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்