முதல் முப்பரிமாண காற்று வேக தரவு செயற்கைக்கோள் வலையமைப்பு
November 1 , 2025 2 days 41 0
ஹாங்காங்கில் உள்ள ஸ்டெல்லரஸ் டெக்னாலஜி எனும் புத்தொழில் நிறுவனமானது முப்பரிமாண காற்று வேகத் தரவுகளுக்கான உலகின் முதல் செயற்கைக்கோள் வலை அமைப்பான ஃபீலியன் செயற்கைக்கோள் தொகுப்பை நிலைநிறுத்த உள்ளது.
இந்தச் செயற்கைக்கோள் தொகுப்பானது காற்றின் வேகம், திசை மற்றும் செங்குத்து இயக்கத்தை உலகளவில் மணி நேர, கிலோமீட்டர் அளவிலான தெளிவுத் திறனில் அளவிடும்.
வானிலை கண்காணிப்பு பலூன்கள், விமானம் மற்றும் செயற்கைக்கோள்களை நம்பியிருக்கும் தற்போதைய அமைப்புகள் ஆனது தொடர்ச்சியற்ற அல்லது முழுமை அற்ற முப்பரிமாண காற்று வேகத் தரவை மட்டுமே வழங்குகின்றன.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டமிடல், விமானப் பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை மற்றும் காப்பீட்டு மாதிரி ஆகியவற்றை மேம்படுத்துவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.