2027 நிதியாண்டிற்காக முதியோருக்கென பிரத்தியேக வரவு செலவுத் திட்டத்தை அறிவித்த முதல் இந்திய மாநிலமாக கேரளா மாறியுள்ளது.
முதியோருக்கான வரவு செலவுத் திட்டத்தின் மொத்த ஒதுக்கீடு ₹46,236.52 கோடி ஆகும், இது மாநில வரவு செலவுத் திட்டத்தில் சுமார் 19.07% ஆகும்.
இந்த ஒதுக்கீட்டில் சுமார் 68% ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களின் ஓய்வூதியங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த வரவு செலவுத் திட்டமானது, ஓய்வூதியங்கள், சுகாதாரப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு மற்றும் மூத்த குடிமக்களுக்கான நலத்திட்டங்களுக்கான செலவினங்களை உள்ளடக்கியது.