முதியோர்களுக்கு உகந்த சூழல் கொண்ட அலுவலகச் சான்றிதழ் - கேரளா
September 13 , 2026 9 hrs 0 min 21 0
பொது அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் மூத்த குடிமக்களுக்கு அணுகக்கூடியதாகவும் வசதியானதாகவும் உள்ளதா என்பதை மதிப்பிடுவதற்காக முதியோர்களுக்கு உகந்த சூழல் கொண்ட அலுவலக சான்றிதழ் (EFOC) திட்டத்தை கேரளா அறிமுகப்படுத்தியது.
உடல் ரீதியான அணுகல், சேவை வழங்கல், ஊழியர்களின் நடத்தை, தகவல் தொடர்பு மற்றும் மூத்த குடிமக்கள் பங்கேற்பு ஆகியவற்றை உள்ளடக்கிய EFOC, இந்தியாவில் இத்தகைய முதல் அரசு சான்றிதழ் அமைப்பாகும்.
படிக்கட்டுகள் இல்லாத அணுகல், தரைத்தளக் கழிப்பறை, மூத்த குடிமக்களுக்கான முன்னுரிமை வரிசை மற்றும் அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய ஒரு நியமிக்கப்பட்ட அதிகாரி ஆகியவை கட்டாய வசதிகளில் அடங்கும்.
முதல் ஆறு மாதங்களில் ஒரு சோதனைத் திட்டத்திற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒன்று வீதம் 14 அலுவலகங்கள் தேர்ந்தெடுக்கப்படும்; பின்னர் இது கிராம, தாலுகா மற்றும் பிற அரசு அலுவலகங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
இந்தியாவிலேயே மிக வேகமாக முதியோர் மக்கள் தொகை அதிகரித்து வரும் மாநிலமாக கேரளா திகழ்கிறது; 2021 ஆம் ஆண்டில் அதன் மக்கள் தொகையில் சுமார் 16.5% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர், இது 2031 ஆம் ஆண்டிற்குள் 20.9% ஆக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.