முதுமலை புலிகள் காப்பகத்தில் ஊடுருவிய தாவர இனங்கள்
August 21 , 2019 2308 days 896 0
தமிழ்நாட்டில் அதிக அடர்த்தியில் புலிகளைக் கொண்டிருக்கும் முதுமலை புலிகள் காப்பகமானது (Mudumalai Tiger Reserve - MTR), “காசியா ஸ்பெக்டாபிலிஸ்” (வட அமெரிக்காவைச் சேர்ந்த) என்ற பெயர் கொண்ட ஒரு ஊடுருவிய தாவர இனத்திலிருந்து அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கின்றது.
உண்ணிச் செடி மற்றும் பார்த்தீனியம் ஆகிய இதர ஊடுருவிய இனங்களால் MTR ஏற்கெனவே பாதிக்கப்பட்டு வருகின்றது.
எந்தவொரு ஊடுருவிய (வேறுபட்ட) இனங்களுக்கும் புதிய மண், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை ஆகியவை சாதகமாக இருக்கும்.
வனப் பகுதியில் உள்ள உணவுச் சங்கிலியானது ஊடுருவிய இனங்களால் மாற்றத்திற்கு உள்ளாகின்றது. இந்த ஊடுருவிய இனங்கள் புல் உள்ளிட்ட பூர்வீகத் தாவரங்கள் முளைப்பதைத் தடுக்கின்றன.