2025 ஆம் ஆண்டு ஆனது கர்நாடக இசையின் மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதரின் 250வது பிறந்தநாளைக் குறிக்கிறது.
அவர் 1775 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் திருவாரூரில் பிறந்தார்.
அவர் சுமார் 229 பாடல்களை உருவாக்கியதாக அறியப்படுகிறது; அவற்றில் பல சங்கீத சம்பிரதாய பிரதர்ஷினியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவர் விளம்ப கலா எனப்படும் மிதமான மற்றும் விரிவான இசை கட்டமைப்புகளைப் பயன்படுத்தி சமஸ்கிருதத்தில் இசையமைத்தார்.
பிருந்தாவன சாரங்கம், த்விஜவந்தி, யமுனா கல்யாணி, மணிரங்கு, நாராயண கவுளா போன்ற ராகங்களில் அவர் இயற்றிய இசையமைப்புகள்/பாடல்கள் அவற்றின் அமைப்பை நிறுவ உதவியது.
ஹேமாவதி, குமுதக்ரியா, நாக காந்தாரி போன்ற சில ராகங்கள் முக்கியமாக அவரது கிருதிகள் (இசையமைப்புகள்) மூலம் நன்கு அறியப்பட்டன.
கர்நாடக இசை ஆய்வுகளின் மையமான கமலாம்பா நவாவரணா மற்றும் அபயம்ப விபக்தி தொடர்கள் போன்ற முக்கிய படைப்புகளை அவர் உருவாக்கினார்.
2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட குருகுஹாம்ருதா என்ற இசை இயக்கம் ஆனது, அதன் தனித்துவமான ராகங்கள் மற்றும் இசை பாணியை வெளிப்படுத்த இந்தக் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்கிறது.