கிழக்கு லடாக்கில் உள்ள முத் நியோமா விமானப்படை தளம் செயல்பாட்டுக்கு வந்து உள்ளது.
இது இந்தியாவின் விரைவான எதிர் நடவடிக்கை திறனை மெய் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் வலுப்படுத்தும்.
இந்த விமானப்படை தளம் ஆனது சுமார் 13,700 அடி உயரத்திலும் மெய் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
இந்த ஓடுபாதை போர் விமானங்கள், போக்குவரத்து விமானங்கள் மற்றும் ஹெலி காப்டர்கள் இயங்க ஆதரிக்கும் என்பதோடு, மேலும் இது லே, கார்கில் மற்றும் தோய்ஸ் ஆகியவற்றிற்குப் பிறகு லடாக்கின் நான்காவது பெரிய விமானப்படைத் தளமாக இது அமைகிறது.
இந்தத் தளம் பிராந்திய மேம்பாட்டினை ஆதரிக்கும் அதே வேளையில் ஹன்லே, லோமா மற்றும் நியோமா போன்ற தொலைதூரக் குடியிருப்புகளுக்கான அணுகலை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.