TNPSC Thervupettagam

முந்த்ரா துறைமுக ஆட்டோமொபைல் ஏற்றுமதி

April 13 , 2026 5 days 94 0
  • ஒரே கப்பலில் சாதனை அளவாக 6,008 கார்களை ஏற்றி அனுப்பியதன் மூலம், இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் ஏற்றுமதி மையமாக முந்த்ரா துறைமுகம் உருவெடுத்துள்ளது.
  • அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் (APSEZ) நிறுவனத்தால் இயக்கப்படும் இத்துறைமுகம், தளவாடத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டி உள்ளது.
  • இது அதிவேகமாக வாகனங்களை ஏற்றுவதற்கும் கையாளுதல் செலவுகளைக் குறைப்பதற்கும் உதவுகின்ற 'ரோல்-ஆன்/ரோல்-ஆஃப்' (RoRo) முனையத்தைப் பயன் படுத்துகிறது.
  • இந்தச் சாதனை, வலுவான உற்பத்தி மற்றும் உலகளாவிய தேவையால் உந்தப்படும் இந்தியாவின் வளர்ந்து வரும் ஆட்டோமொபைல் ஏற்றுமதியை எடுத்துக்காட்டுகிறது.
  • ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா ஆகியவை முக்கிய ஏற்றுமதி இடங்களாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்