முன்னுரிமைகளுக்கான பொதுமைப் படுத்தப்பட்ட அமைப்பு - இந்தியா
February 13 , 2019 2372 days 759 0
நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி இந்தியாவை முன்னுரிமைகளுக்கான பொதுமைப்படுத்தப்பட்ட அமைப்பிலிருந்து (The Generalized System of Preferences - GSP) விலக்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றார்.
1970களில் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறையில் இருக்கும் இத்திட்டத்தில் உலகின் மிகப்பெரிய பயனாளி இந்தியாவாகும்.
வர்த்தக உறவுகளில் சமீபத்திய சரிவிற்கான முக்கிய தூண்டுதல் மிகவேகமாக வளர்ந்துக் கொண்டிருக்கும் இணையதளச் சந்தை வர்த்தகத்தைக் கட்டுப்படுத்திடும் இந்தியாவின் புதிய மின்னணு வர்த்தக விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதே ஆகும்.
இதன் மூலம் இந்தியா ஒரு முக்கிய அமெரிக்க வர்த்தகச் சலுகையை இழக்க நேரிடும். இந்தச் சலுகையின் மூலம் இந்தியா அமெரிக்காவிற்குச் செய்யும் ஏற்றுமதியில் 5.6 மில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு ஜீரோ கட்டணங்களை அனுபவிக்கின்றது.
முன்னுரிமைகளுக்கான பொதுமைப் படுத்தப்பட்ட அமைப்பு
வளரும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அடையாளம் காணப்பட்ட 129 பயனாளி நாடுகள் மற்றும் நிலப்பரப்புகளிலிருந்து 4800 பொருட்களுக்கு வரிகள் ஏதுமின்றி முன்னுரிமை நுழைவு அனுமதியை அளித்திடும் ஒரு அமெரிக்க வர்த்தகத் திட்டமே இதுவாகும்.