முன்னுரிமைத் துறைக்கு கடன் வழங்கல் விதிகளின் திருத்திய விதிமுறைகள்
September 9 , 2020 1804 days 729 0
இந்திய ரிசர்வ் வங்கியானது வளர்ந்து வரும் தேசிய முன்னுரிமைகளின் வரிசையில், தொழில்முனைவுத் திறன் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் ஆகியவற்றை இணைப்பதற்காக PSL (Priority sector lending) வழிகாட்டுதல்களைத் திருத்தியுள்ளது.
இது பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது.
மின்சார விநியோக அமைப்பினால் இணைக்கப்பட்ட வேளாண் காற்றழுத்த விசைக் குழாய்களின் சூரிய ஒளிமயமாக்கத்திற்காக வேண்டி சூரிய ஒளி மின்னாற்றல் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்காக விவசாயிகளுக்குக் கடன் வழங்குதல்.
அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு ஆலைகளை அமைப்பதற்காகக் கடன் வழங்குதல்.
திருத்தப்பட்ட PSL வழிகாட்டுதல்கள் பின்வருவனவற்றை மேற்கொள்ள வழிவகை செய்கின்றது.
கடன் வழங்குதலில் பற்றாக்குறையுள்ள பகுதிகளுக்கு சிறந்த முறையில் கடன் வழங்குதல்.
சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் விளிம்புநிலை பிரிவினர்களுக்குக் கடன் வழங்குதலை அதிகரித்தல்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சுகாதாரக் கட்டமைப்பு ஆகியவற்றிற்கு கடன் வழங்குதலை ஊக்கப்படுத்துதல்.