January 27 , 2026
10 hrs 0 min
34
- அரசு ஊழியர்கள் முன்னுரிமை நியமனப் பலன்களை மீண்டும் பயன்படுத்துவதைத் தடுக்கும் மசோதாவை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.
- இந்தத் திருத்தம், தமிழ்நாடு தமிழ் வழியில் படித்தவர்கள் (PSTM) சட்டம், 2010 உடன் தொடர்புடையது.
- தமிழக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், இந்த சட்டத் திருத்தத்தை சட்டசபையில் தாக்கல் செய்தார்.
- இந்தச் சட்டத்தின் கீழ், நேரடி ஆட்சேர்ப்பு காலியிடங்களில் 20 சதவீதம் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
- ஏற்கனவே PSTM முன்னுரிமையைப் பயன்படுத்தி அரசு வேலை பெற்ற நபர்கள் அதே ஊதியப் பதவி நிலைக்கு அதை மீண்டும் பயன்படுத்த முடியாது என்று இந்த மசோதா கூறுகிறது.
- அத்தகைய தேர்வர்கள் அதிக ஊதியம் பெறும் பதவிகளுக்கு மட்டுமே அந்த முன்னுரிமையைப் பயன்படுத்த முடியும்.
- பணியில் உள்ள அரசு ஊழியர்கள் மீண்டும் PSTM முன்னுரிமைக்குத் தகுதியற்றவர்கள் என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Post Views:
34