TNPSC Thervupettagam

முன்னெச்சரிக்கை அமைப்பு

January 3 , 2023 962 days 491 0
  • மத்திய மின்சார அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆகியவை இணைந்து, மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள பாதிக்கப் படக் கூடிய நீர் மின் நிலையத் திட்டங்கள் அல்லது மின் நிலையங்களுக்காக சில முன் எச்சரிக்கை அமைப்புகளை நிறுவுவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) சமீபத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • தற்போது, மலைப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான நீர்மின் நிலையத் திட்டங்கள் மற்றும் அணைகளில் முன்னெச்சரிக்கை அமைப்புகள் இல்லை.
  • முன்னெச்சரிக்கை அமைப்பு (EWS) என்பது பின்வருவனவற்றினை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த அமைப்பாகும்.
    • இடர் கண்காணிப்பு, முன்னறிவிப்பு மற்றும் கணிப்பு
    • பேரிடர் அபாய மதிப்பீடு
    • தகவல் தொடர்பு மற்றும் ஆயத்த நடவடிக்கைகள் அமைப்பு
    • பேரிடர் அபாயங்களைக் குறைப்பதற்கு தனிநபர்கள், சமூகங்கள், அரசாங்கங்கள் மற்றும் வணிகங்கள் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்க உதவும் சில செயல் முறைகள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்