TNPSC Thervupettagam

முப்படைகளின் தலைமைத் தளபதி பதவி – உருவாக்கம்

December 27 , 2019 2028 days 790 0
  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்பிற்கான அமைச்சரவைக் குழுவானது முப்படைகளின் தலைமைத் தளபதி (chief of defence staff - CDS) என்ற ஒரு புதிய பதவியை உருவாக்க ஒப்புதல் அளித்துள்ளது.
  • CDS பதவியில் உள்ளவர் 1999 ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்ட கார்கில் மறுஆய்வுக் குழு பரிந்துரைத்த படி, மத்திய அரசின் ஒற்றை இராணுவ ஆலோசகராகச் செயல்பட இருக்கின்றார்.
  • CDS பதவியில் உள்ளவர் மூன்று படைகளின் பணிகளை மேற்பார்வையிட்டு, அவற்றை ஒருங்கிணைக்க இருக்கின்றார்.
  • CDS பதவியில் உள்ளவர் முப்படைத் தலைவர்களிடையே ‘சமமானவர்களில் முதன்மையானவர்’ என்று விவரிக்கப் படுகின்றார்.
  • CDS பதவிக்கு தகுதியானவர் இந்திய ஆயுதப்படைகளான இராணுவம், விமானப் படை அல்லது கடற்படை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றிலிருந்து நான்கு நட்சத்திரக் குறிகளைப் பெற்ற ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுச் செயல்பட இருகின்றார்.

பாதுகாப்புத் துறை தொடர்பான அமைச்சரவைக் குழுவில் உள்ள உறுப்பினர்கள்.

  • இந்தக் குழுவின் தலைவர் - பிரதமர்
  • மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்
  • மத்திய உள்துறை அமைச்சர்
  • மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர்.
  • மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்