பொருள், இயந்திரம் மற்றும் மென்பொருளுக்கான 50 இந்தியா சார்ந்த தொழில் நுட்பங்கள், முப்பரிமாண அச்சாக்கத்திற்கான 100 புதியப் புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் 500 புதியத் தயாரிப்புகள் போன்ற சில இலக்குகளை அடைவதை இந்தியா ஒரு இலக்காகக் கொண்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்குள் முப்பரிமாண அச்சாக்கத்தினை உருவாக்கலுக்கான தேசிய உத்தியின் படி இந்த இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
நெகிழி, பிசின், தெர்மோபிளாஸ்டிக் (வெந்நெகிழி), உலோகம், இழை அல்லது பீங்கான் போன்ற பொருட்களின் தொடர் அடுக்குகளை அடுக்கி, பொருட்களின் முன்மாதிரிகள் அல்லது செயல்பாட்டு மாதிரிகளை உருவாக்க 3D அச்சாக்கம் அல்லது முப்பரிமாண அச்சாக்கம் கணினியின் வடிவமைப்பு முறையைப் பயன்படுத்துகிறது.