அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம், சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ஆராய்ச்சிப் பூங்காவில் விண்வெளிக்கான இந்தியாவின் முதல் தனியார் பெரிய வடிவிலான முப்பரிமாண அச்சிடும் மையத்தினைத் தொடங்கி உள்ளது.
இந்த மையமானது, 1 மீட்டர் உயரம் வரையிலான விண்வெளிக் கூறுகளை முப்பரிமாண முறையில் அச்சிடும் வசதியை செயல்படுத்துகிறது என்பதோடு இது ஏவு வாகன அமைப்புகளின் வேகமான மற்றும் மலிவான மேம்பாட்டினையும் அனுமதிக்கிறது.
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிகப்படியான அச்சு சாயக் கூறுகளை நீக்கும் (டி-பவுடர்) இயந்திரம் ஆனது, உயர்தர மேற்பரப்பு வடிவமாக்கம் மற்றும் அச்சிடப்பட்ட கூறுகளுக்கான விண்வெளி தர நிலைகளை உறுதி செய்கிறது.
புதிய வடிவமைப்புகள் முந்தைய மாதிரிகளை விட ஏழு மடங்கு உந்துதலை வழங்குகின்றன என்பதால், இந்த மையமானது முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட ஒற்றைத் துண்டு ஏவு வாகன இயந்திரங்களின் உள்ளக உற்பத்தியை ஆதரிக்கிறது.