மாநிலத்தில் உள்ள மூன்று கோயில்களில் 100 அடிக்கு மேல் உயரமுள்ள மூன்று முருகர் சிலைகள் நிறுவப்பட உள்ளன.
கோயம்புத்தூர் மாவட்டத்திந மருதமலையில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஓர் அருங்காட்சியகம் மற்றும் வாகன நிறுத்துமிட வசதிகளுடன் 184 அடி உயரமுள்ள முருகர் சிலை நிறுவப்பட உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள திண்டலில் உள்ள வேலாயுதசுவாமி கோவிலில் 180 அடி உயரமுள்ள ஒரு சிலை நிறுவப்படும்.
இராணிப்பேட்டை மாவட்டத்தின் திமிரியில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலில் 114 அடி உயரமுள்ள சிலை நிறுவப்பட உள்ளது.